வற்றாப்பளையில் இயங்காத நிலையில் இருந்த சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

வற்றாப்பளையில் இயங்காத நிலையில் இருந்த சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

பாலநாதன் சதீசன்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம், 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் இயங்காத நிலையில் இருந்து வந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குறித்த சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு நேற்றையதினம் (22) மாலை மக்களுடைய பாவனைக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

சனசமூக நிலையத்தின் தலைவரும், செந்தமிழ் விளையாட்டு கழகத் தலைவருமான சதீஸ்கரனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கரைதுறைப்பற்று சனசமூக நிலைய உத்தியோகத்தர் விக்ரர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. ஜீட்சன் , சிறப்பு விருந்தினராக புனரமைப்பிற்கான நிதி பங்களிப்பினை வழங்கி முன்னுதாரணமாக திகழ்ந்த புலம்பெயர் நாட்டில் வசிக்கும் வற்றாப்பளை சேர்ந்த செல்வராசா கலந்து கொண்டார்.

நிகழ்வில் கிராம மட்ட அமைப்பினர், விளையாட்டு கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும்  கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட சனசமூக நிலையத்தை பார்வையிட்டு வேலைகளை ஆரம்பித்திருந்தனர்

Bootstrap