கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டம்.

கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டம்.

கனடா இந்த ஆண்டு ஆசிரியர்களை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை கடனா வெளியிட்டிருக்கிறது.

கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது. கனடாவின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் பணியாற்ற வெளிநாட்டினர் வரவேற்கப்படுகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு, ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான உதவியாளர்கள், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியாளர்கள், சமையல்காரர் ஆகியோரி ந் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM - Science, Technology, Engineering, Mathematics) துறையில் அனுபவம் பெற்றவர்களையும், தொழில்துறை (Trades), விவசாயம், பிரஞ்சு மொழி திறமை கொண்டவர்களையும் கனடா வரவேற்க தயாராக இருக்கிறது.

ஒரு காலத்தில் கனடாவுக்கு சாரதிகளின் தேவை அதிகமாக இருந்த நிலையில் தற்போது பைலட்டாக இருந்தாலும் கூட கனடாவில் வேலை கிடைப்பது கஷ்டம் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

மறுபுறம் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி முடிவுகளால், அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கு விசா நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கனடா பக்கம் நோக்கி புலம் பெயர் தொழிலாளர்களை தங்கியுள்ளது.

கனடா வளர்ந்த நாடாக இருந்தாலும், போதிய ஆட் பலம் கிடையாது. மட்டுமல்லாது வளர்ந்து வரும் விலைவாசி காரணமாக கனடா மக்களும் நியாயமான ஊதியத்தை கேட்கிறார்கள்.

அதேவேளை கனடாவுக்கு பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய தயாராக உள்ளனர்.

இதன் காரணமாக கனடாவின் தனியார் முதலாளிகள் புலம் பெயர் தொழிலாளர்களை பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.

Bootstrap