ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ரொறன்ரோவில் மோஸ் பார்க்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குயின் மற்றும் ப்ரோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவரின் உயிரை காக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது பலன் அளிக்கவில்லை என உயிர் காப்பு பணியாளர்களும் போலீசாரும் தெரிவிக்கின்றனர்.

படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் பற்றிய விவரங்களோ தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய விவரங்களோ வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Bootstrap