Friday 17th of May 2024

மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் ஜீவன் ஆரம்பித்து வைப்பு

பிரசுரிக்கப்பட்டது: 2024-02-19 16:16:21

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் (19) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது

முதற்கட்டமாக 1,300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெற்றது.

இதன் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் இன்றைய தினம் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது