புதிய குரல் மாதாந்த பத்திரிகை துவக்க விழா 2018!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலாக ஊடகப்பரப்பில் உதயமாகியுள்ள புதிய குரல் பத்திரிகை துவக்க விழாவும் முதல் பிரதி வெளியீடும் புதிய குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும். நிறைவேற்றுப் பணிப்பாளருமான பஹத் ஏ மஜீத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், ஏ.எல்.நசீர், சந்திரகாந்த சந்திரநேரு, ஆனந்த சங்கரி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். முதல் பிரதியினை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அமானுல்லா பெற்றுக்கொண்டதோடு இரண்டாவது பிரதியினை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் புதிய குரல் மாத இதழின் இணையத்தளமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.புதிய குரல் பத்திரிகை முதலாவது ஆண்டுவிழா 2019

புதிய குரல் மாதாந்த பத்தரிகையின் முதலாவது ஆண்டு துவக்க விழாவும் ஊடகர்களை கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ஐனா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. புதிய குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும். நிறைவேற்றுப் பணிப்பாளருமான பஹத் ஏ மஜீத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதிய குரல் பிரதிகள் வெளியீடு செய்யப்பட்டது. கடந்த மூன்று தசாப்தங்களாக ஊடகப்பணி முன்னெடுத்து வரும் பிரபல ஊடகர்களான பகுர்தீன், மப்றூக் ஆகியோருக்கு வாழ்நாள் ஊடக விருது வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.நான்காவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய குரல் பத்திரிகையின் சிறப்பு வெளியீடு 2021

நான்காவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய குரல் பத்திரிகையின் சிறப்பு வெளியீடும், அறிமுக விழாவும் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக திரைப்பட இயக்குனர் ஹஸீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யூசுப் நியாஸ், சட்டத்தரணி எஸ்.எம்.பைறூஸ், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் அஸ்வர் சாலி உட்ட பலரும் கலந்து கொண்டனர்.
புதிய குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும். நிறைவேற்றுப் பணிப்பாளருமான பஹத் ஏ மஜீத் அவர்களின் மிகச்சிறந்த முன்னெடுப்பில் கடந்த 4 வருடங்களாக இப்பத்திரிகை வெளி வருகின்றது.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் சிறுபான்மை சமூகத்தின் சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் நீண்ட உரையொன்றை நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் புதிய குரல் பிரதம ஆசிரியர் பஹத் ஏ மஜீத் அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.