முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம்


எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைய, முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதனடிப்படையில், முதலாவது கிலோ மீட்டருக்காக 10 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.எம்.நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.


இதனிடையே, இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ மற்றும் லங்கா IOC நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:
Write comments