எரிபொருளுடன் சென்ற தொடருந்து தடம்புரண்டது!


 

எரிபொருள் தாங்கி தொடருந்து ஒன்று ரம்புக்கனை – கடிகமுவ இடையே தடம்புரண்டுள்ளது.


இதனால் மலை நாட்டு தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.


இதன்காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில்கள் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,பேராதனையிலிருந்து பயணிக்கும் ரயில்கள் கடிகமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments