புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு


 

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அஜித் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக 109 வாக்குகளும், ரோஹினி கவிரத்னவிற்கு ஆதரவாக 78 வாக்குகளும் கிடைத்துள்ளதுடன், 23 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.


இன்று(17) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது.


இதன்போது குறித்த இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி கவிரத்ன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் அஜித் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.


இதனையடுத்து, பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியது.

No comments:
Write comments