ரயில் தடம்புரண்டதில் உடரட்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு


 

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான வீதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


ரம்புக்கணை மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது.


கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.


அண்மையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்ட அதே இடத்தில் இந்த ரயிலும் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்படி, உடரட்ட ரயில் வீதியில் பயணிக்கும் அனைத்து ரயில்களும் ரம்புக்கணை ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments