கொட்டாஞ்சேனையில் நபரொருவர் படுகொலை!


 

கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் ஆர்மர் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments