இரண்டு நாட்களுக்கு மூடப்படும் பாராளுமன்ற வீதி


பாராளுமன்றத்தை அண்மித்த தியத்த உயன சந்தி தொடக்கம் ஜயந்திபுர சந்தி வரையான வீதி மற்றும் ஜயந்திபுர சந்தி தொடக்கம் கியங்ஹேன் சந்தி வரையான வீதி ஆகியன இன்றும்(05) நாளையும்(06) மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், பாராளுமன்ற வீதிக்கு பிரவேசிக்கும் குறுக்கு வீதிகளும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்த விடயத்தை பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.


மாற்று வீதிகள் இல்லாத குறித்த பகுதியில் வசிப்போர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி பயனிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் நாட்களில் குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் பயணிப்பதற்கு இடையூறு ஏற்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Write comments