கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல்


 

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.


எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் 50 வீத ஊழியர்களே சேவைக்கு சமூகளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


எவ்வாறாயினும், அவசரப்பிரிவில் நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments