வாவியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

மஹியங்கனை – கிரிமடில்ல, தம்பராவ வாவியில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.


10 மற்றும் 15 வயதான இரு பிள்ளைகளும் 45 தந்தை ஆகியோர இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தம்பராவ வாவிக்கு நேற்று(25) மாலை நீராடச் சென்று வீடு திரும்பாத நிலையில், வீட்டிலிருந்தவர்கள் அங்கு சென்று தேடியுள்ளனர்.


நீராடச் சென்றவர்களின் ஆடைகள் அணைக்கட்டில் காணப்பட்டதால் பிரதேச மக்களுடன் இணைந்து அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


இதன்போது குறித்த மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


மஹியங்கனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments