மின்வெட்டு குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு


 

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை பரிட்சை இடம்பெறும் காலப்பகுதி மற்றும் மாலை 6 மணிக்கு பின்னர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை எதிர்வரும் 21, 22 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் பிற்பகல் 6 மணிக்குப் பின்னர் மின்வெட்டு அமல் படுத்தப்பட மாட்டாது என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments:
Write comments