சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு


சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, இன்று(26) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


கடந்த 09ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வட்டரெக்க சிறைச்சாலையிலுள்ள கைதிகள் கலந்துகொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில், வட்டரெக்க சிறைச்சாலை கைதிகள் சிலரிடமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று(25) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.


இதனைத்தவிர, சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதியான சுதேஷ் நந்திமால் மற்றும் சட்டத்தரணி சேனக பெரேரா ஆகியோரிடமும் நேற்று(25) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Write comments