பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு


பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று(05) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆதரவாக 148 வாக்குகளும் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருக்கு ஆதரவாக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் தீர்மானித்ததால், பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவியை இராஜினாமா செய்தார்.


எனினும், இன்று மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகர் பதவிக்கு மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.


பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நியமிக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று முன்மொழிந்தது.


இதன்போது, தாமும் அவருக்கு பூரண ஆதரவை வழங்குவதாக ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சபையில் அறிவித்தது.


அதற்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை முன்மொழிந்தது.


 


பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் முடிவுகளுக்கு அமைய, ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு 148 வாக்குகளும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு 65 வாக்குகளும் கிடைத்திருந்தன.


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன ஆகியோர் இன்றைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.


பாராளுமன்ற உறுப்பினர்களான W.D.J.செனவிரத்ன, C.V.விக்னேஸ்வரன், மயந்த திசாநாயக்க, இம்ரான் மஹ்ரூப், S. நோகராதலிங்கம் ஆகியோரும் சபைக்கு வருகை தரவில்லை.

No comments:
Write comments