ஆர்ப்பாட்டத்தை கலைக்க இராணுவத்தை ஈடுபடுத்தியமை தொடர்பில் அமெரிக்கா கவனம்


 

மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் இராணுவ பிரசன்னத்தை ஈடுபடுத்தியமை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது.


அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நெட் பிறைஸ் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.


அமைதியான ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக, இராணுவத்தை ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அடைவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வன்முறையில் ஈடுபடுகின்ற அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Write comments