யாழில் இருவருக்கு வாள்வெட்டு; மின்சாரம் தடைப்பட்டிருந்த போது சம்பவம்


யாழ்ப்பாணம் – கல்வியங்காடு, புதிய செங்குந்தா வீதி பகுதியில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


நேற்றிரவு இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.


மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நால்வர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மின்சாரம் தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

No comments:
Write comments