தெல்லிப்பளை வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் நோயாளர்களை ஏற்றியவாறு நடுவீதியில் விட்டு கடைக்குச் சென்ற சாரதியால் நோயாளர்கள் பெரும் பதற்றந்திற்கு உள்ளாகினர்.
யாழ்ப்பாணம தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுவண்டி சாரதியும் ஊழியருமே மேற்படி அசண்டையீனமாக செயற்பட்டுள்ளனர்.
நேற்று யாழ் நகர்பகுதியில் உள்ள நடுவீதியில் நோயாளர் காவுவண்டிக்குள் நோயாளர்கள் கதறுவதை பார்த்த ஒருவர் அதை காணொளியாக பதிவுசெய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
தெல்லிப்பளைக்கு போக வேண்டிய நோயாளி காவு வண்டியின் சாரதி, வண்டியுடன் நோயாளர்களை இருத்திவிட்டு கடைக்குச்சென்றுள்ளார் .
குறித்த வண்டியில் நோயாளிகளை ஏற்றிய சாரதி, அரைமணி நேரத்துக்கு மேலாகியும் உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக நேரத்தை வீணடித்துள்ளார்.
அதேநேரம் வண்டியில் வந்த சுகாதார ஊழியர் வங்கிக்கு சென்றுள்ளார். அவரும் தனது சொந்த தேவையை நிறைவேற்ற வெளியே சென்றுள்ளார்.
குறித்த வண்டியில் முதியவரும் இரு பெண் நோயாளர்களும் இருந்துள்ளனர்.நண்பகல் என்பதால் வெயில் வெக்கை தாங்காது நோயாளர்கள் வண்டிக்குள் இருந்து கதறுவதை பலரும் பார்த்து விசனமடைந்துள்ளனர். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்
No comments:
Write comments