லிட்ரோ அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் அதிருப்தி


 

லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.


எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ள நிலையில் நேற்று இரவு வரையில் பாரவூர்திகள் மூலம் அவை விநியோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


எனவே அதிகாரிகளின் தாமதம் குறித்து விசாரணை செய்யவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனவே கோப் குழுவின் தலைவர் இது தொடர்பில் எரிவாயு நிறுவன அதிகாரிகளை அழைத்து கருத்துக்களை அறியவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments