வெடிபொருட்கள் கடத்த முயற்சி: இலங்கையர்கள் உள்ளிட்ட ஐவருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை


இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர்.


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வௌி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரவழைத்து, இலங்கைக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு 13 சந்தேகநபர்களுக்கு எதிராக Q-பிரிவு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்


சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தபோது, 7 பேர் தலைமறைவாகியதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து, எஞ்சிய 05 பேருக்கு எதிராக தனியான வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், பிரதிவாதிகள் அனைவரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளதாக அறிவித்தார்.


இதற்கமைய, இவர்களுக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனையும், 10000 இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


குற்றவாளிகள் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

No comments:
Write comments