லிட்ரோ அதிகாரிகளை கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு


 

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினரை இன்று கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இன்று முற்பகல் 11.00 மணிக்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு நிறுவனத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எரிவாயு தட்டுப்பாடு, அது தொடர்பான தீர்வுகள் மற்றும் எரிவாயு கப்பல் நாட்டிற்கு வரும்போது விநியோகம் மேற்கொள்ளப்படும் விதம் குறித்து இதன்போது விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கப்பல்கள் வந்த போதிலும் எரிவாயு விநியோகம் தாமதமானது தொடர்பில் உரிய நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

No comments:
Write comments