தமிழர்களின் பண்டைய முறையிலான திருமணம் ஒன்று நேற்று (23) மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியிலேயே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
நெற் கற்றைகளினால் சோடனை செய்யப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும் மணமகளும் ஆலயத்திற்க அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் வீடும் நெற்கற்றைகளினால் சோடனை செய்யப்பட்டிருந்ததுடன் நிகழ்வுகள் பாரம்பரியங்களை பேணியதாக நடைபெற்றது.
தற்போதைய காலத்தில் தமிழர்களின் பண்டைய பாரம்பரியங்கள் மறக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அவற்றினை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திருமணத்தை நடாத்தியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
No comments:
Write comments