நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்


 

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே நாளைய தினம் பாராளுமன்றத்தில் முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹினி கவிரத்னவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி நாளை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.


அத்துடன் நாளை மேலும் இரண்டு பாராளுமன்றத் வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, நாளை பாராளுமன்ற ஆசனங்களில் மாற்றம் இடம்பெறவுள்ளது.


எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று பிற்பகல் எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments