அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.


ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை இன்று மாலை ஆரம்பித்திருந்தனர்.


பாராளுமன்றத்திற்கு பேரணியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையை தகர்க்க முற்பட்ட போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.


கண்ணீர்ப்புகை பிரயோகம் காரணமாக அவ்வழியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களும் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.


'அரசாங்கத்தை விரட்டுவோம் – முறைமையை மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை மாணவர்கள் முன்னெடுத்தனர்.


வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த மக்கள் எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்த மாணவர்களுக்கு குடிநீர் போத்தல்களை வழங்கி ஆதரவை வௌிப்படுத்தியிருந்தனர்.


மாணவர்கள் நுகேகொடையை தாண்டி இராஜகிரியவை நோக்கி பேரணியை முன்னெடுத்தனர்.


பின்னர், பாராளுமன்றத்தை நோக்கி பயணித்தனர்.

No comments:
Write comments