முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளது!


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, எரிபொருளுக்கான தட்டுப்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு சர்வதேச மே தினத்தை நடத்துவதை தவிர்த்துக்கொண்டுள்ளோம் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு புதிய நகர மண்டபப் பகுதியில் நேற்று (1) நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,


மே தினத்தில் பாரிய பேரணிகளை நடத்தாது தொழிற்சங்க கூட்டங்கள் பலவற்றை நடத்துவதற்கு நாம் தீர்மானித்தோம். விசேடமாக வாகனங்கள், பஸ்களில் ஆதரவாளர்களை அழைத்து வராமல் மே தின கூட்டத்தை நடத்துவதற்கே தீர்மானித்தோம்.


எம்மைப்போன்றே எம்முடன் இணைந்த பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் சிறிய சிறிய கூட்டங்களை நடத்தி வருகின்றன.


நாட்டின் நிலைமகள் குறித்து விளங்கிக் கொண்டு இந்தக் கூட்டத்தை மிகவும் பயனுள்ளதாக நடத்த வேண்டியது அவசியமாகும்.


நாம் முன்னெப்போதும் ஏற்படாத பொருளாதார அதேபோன்று பொருளாதார நெருக்கடியுடன் கூடிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்.


எமது பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்துள்ளது. வியாபாரத்துறைகள் வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளன. விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல உரம் இல்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments