மறு அறிவித்தல் வரை மேல்மாகாணத்தில் ஊரடங்கு


 

மறு அறிவித்தல் வரை மேல்மாகாணம் முழுவதும் பொலீஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


கொழும்பு வடக்கு,மத்தி மற்றும் தெற்கு பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் மேல்மாகாணம் முழுவதும் பொலீஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


காலிமுக திடலில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த பகுதியில் தற்போது பதற்ற நிலை நிலவுகின்றது.


இதேவேளை தாக்குதலில் காயமடைந்த 23பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments