முன்னாள் பிரதமர் மஹிந்தவிடம் வாக்குமூலம் பதிவு


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மஹிந்த ராஜபக்ஸ தங்கியுள்ள இடத்திற்கு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்று வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த 09ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Write comments