தெல்லிப்பழையில் மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல்


யாழ். தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்த மூதாட்டி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments