ஜெர்மன் பிரதமருடன் மோடி சந்திப்பு- இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை


பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு வந்தடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்லினில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார்.


அதன்பின்னர் ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகளை முழு அளவில் மதிப்பாய்வு செய்து வலுப்படுத்துதல் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர். வர்த்தகம் மற்றும் கலாச்சார இணைப்புகளுக்கு உத்வேகம் அளிப்பது குறித்தும் பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். அதன்பின்னர் 6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

No comments:
Write comments