குறைந்த விலையில் எரிவாயு


நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிவாயு பெற்றுக் கொடுப்பதற்கான புதிய வழங்குனர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தாய்லாந்தின் சியம் கேஸ் நிறுவனம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


இதுவரை கேஸ் இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.


ஓமான் கேஸ் நிறுவனங்களின் ஊடாக நாட்டிற்கு வழங்கப்படும் இறுதி கேஸ் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. அந்த கப்பலில் மூவாயிரத்து 500 மெற்றிக் தொன் கேஸ் கொண்டு வரப்பட்டது.

No comments:
Write comments