மாவத்தகமவில் ஒருவர் சுட்டு கொலை


 

குருணாகல் மாவத்தகம – பரகஹதெனிய பகுதியில் நேற்றிரவு(22) ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த நபர், மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பரகஹதெனிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:
Write comments