மூன்று அமைச்சுகளின் செயலாளர்கள் மீண்டும் நியமனம்


 

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கான பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த அமைச்சுகளின் செயலாளர்களாக ஏற்கனவே கடமையாற்றிய செயலாளர்களே, நேற்று முதல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதன் பிரகாரம், பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் மீண்டும் நியமனம் பெற்றுள்ளார்.


நிதி அமைச்சின் செயலாளராக கே.எம். மஹிந்த சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Write comments