காலி முகத்திடலில் தொடர்ந்தும் பதற்ற நிலை


 

காலி முகத்திடலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவி வருகின்றது.


இன்று(09) காலை அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த ஆதரவாளர்கள் அதனை தொடர்ந்து காலி வீதியில் அமைக்கப்பட்டிருந்த மைனாகோகம பகுதியில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அப்பகுதியிலிருந்த கூடாரங்களையும் அகற்றியிருந்தனர்.


இதனைத் தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம பகுதிக்கு சென்று அங்கிருந்த கூடாரங்கள் சிலவற்றை அகற்றியிருந்ததுடன் சில கூடாரங்களை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.


இதனையடுத்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் கட்டுப்டுத்துவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.


பதற்ற நிலையை தணிப்பதற்கு கண்ணீர்ப்புகை பிரயோகமும் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ள்பட்டிருந்தது.


தொடர்ந்தும் அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.

No comments:
Write comments