குளியாப்பிட்டி டிபென்டர் விபத்து தொடர்பில் மூவர் கைது


குளியாப்பிட்டி – கனதுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் டிபென்டர் வாகனமொன்றும் மோதி விபத்து இடம்பெற்றது.


விபத்து தொடர்பில் டிபென்டர் வாகனத்தின் சாரதி, அதில் பயணித்த 14 வயதான சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தின் பின்னர் பிரதேச மக்களால் குறித்த டிபென்டர் வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Write comments