இன்று மின்வெட்டு இல்லை


தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அத்துடன் நோன்பு பெருநாளை முன்னிட்டு நாளை மறுதினம் மின்வெட்டு இருக்காது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


எவ்வாறாயினும், நாளை (02) நாடளாவிய ரீதியில் 3 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


பகலில் 2 மணித்தியாலங்களும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

No comments:
Write comments