830 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கும் பங்களாதேஷ்


830 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்குவதாக பங்களாதேஷ் உத்தரவாதமளித்துள்ளது.


இதற்கமைய, பங்களாதேஷ் அரசாங்கத்தினால் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


இந்த மருந்துகள் தலைநகர் டாக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தில் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

No comments:
Write comments