ஜாக்குலின் பெர்னாண்டஸின் 7 கோடி ரூபா மதிப்பிலான சொத்துகள் முடக்கம்


நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் 7 கோடி இந்திய ரூபா மதிப்பிலான சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த 200 கோடி ரூபாவில், 5.71 கோடி ரூபாவை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசாக கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை 7 கோடியை முடக்கியுள்ளது.


பண மோசடி வழக்கில் கைதாகி கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் 200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:
Write comments