தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (27) விசேட கலந்துரையாடல்


 தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் நாளை (27) நடைபெறவுள்ளது.


நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.


தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட வரையறைக்கு அமைய தலையீடு செய்யக்கூடிய விதம் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக அவர் கூறினார்.

No comments:
Write comments