இன்று(24) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ


 

இன்றைய தினம்(24) 12.5 கிலோ கிராம் 05 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாதென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


எனவே, வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


அத்துடன், தேவைக்கு அதிகமாக சமையல் எரிவாயுவை சேகரித்து வைப்பதை தவிர்க்குமாறும், எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யவோ, கொள்வனவு செய்யவோ வேண்டாமெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனிடையே, மேலும் 02 எரிவாயு கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


குறித்த 2 கப்பல்களுக்கான கட்டணமாக 6.5 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


அந்த இரு கப்பல்களிலும் 7,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில், எரிவாயுவை ஏற்றிய குறித்த இரு கப்பல்களும் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments