மரண தண்டனை நிறைவேற்றப்பட்டோர் எண்ணிக்கை 20 வீதத்தால் உயர்வு


உலகளாவிய ரீதியில் கடந்த வருடம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் உரிமைகளுக்கான குழு தெரிவித்துள்ளது.


அத்துடன், மரண தண்டனைகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் உரிமைகளுக்கான குழு குறிப்பிட்டுள்ளது.


மாநிலங்களுக்குள்ள அதிகாரத்திற்கமைவாக 579 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை, குறைந்தபட்சம் 2,052 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் உரிமைகளுக்கான குழுவின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments