செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
செனகல் நாட்டில் உள்ள பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் உள்ள வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.
இது குறித்து அந்நாட்டு அதிபர் Macky Sall ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், செனகலின் மேற்கு நகரமான டிவௌவான் நகரில் உள்ள பொது மருத்துவமனையின் குழந்தைகளுக்கான பிரிவில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 11 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அதிபர், குழந்தைகளின் தாய்மார்களுக்கும் குடும்பங்களுக்கும் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments