அண்ணாமலை இலங்கை வருகை!


 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கமான உறவை பேணி வந்ததுள்ளது.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இந்தியாவில் இருந்து மலையக மக்கள் சார்ந்த உதவிகளை முதல் முதலாக இலங்கை பெற வழிவகுத்து தந்தமை குறிப்பிடத்தக்கது.


மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான்  காலம் முதல் அமரர் ஆறுமுகன் தொண்டமான்  காலம் வரை இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொழிலாளர் கங்கிரசுடன் காலம் தொட்டு நட்புறவை வலுப்படுத்தி வந்தது.


அவ்வாறே இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பை ஏற்று பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாக அண்ணாமலை  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இலங்கை வந்தடைந்தார். அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் அரசியல் அமைப்பாளர்களான ரகு, கோபி ஆகியோர் தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

No comments:
Write comments