யாழ்ப்பாணமும் முடங்கியது! நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிப்பு
அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று பாரிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றன.


இதன்காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதேவேளை இன்றைய தினம் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.   


யாழ்ப்பாணம்

யாழ்பாணத்திலும் இன்றைய தினம் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதன்காரணமாக வீதிகளில் மக்களின் நடமாட்டமும் குறைந்தளவிலேயே காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                                            

No comments:
Write comments