லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்புநேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இது முன்னைய விலையில் இருந்து 2,185 ரூபாய் அதிகரிப்பாகும்.


அதேபோல், 5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 874 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,945 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 404 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


அதன்படி, 5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.


12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 5,175 ரூபாவாக அதிகரிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.


எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த விலை அதிகரிப்பு செல்லாது என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

No comments:
Write comments