றம்புக்கணையில் உயிரிழந்த இளைஞருக்கு காலி முகத்திடலில் அஞ்சலி


 

றம்புக்கணை போராட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபருக்கு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.


நேற்று, றம்புக்கணையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.


இதன்போது, 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இவர்களில் 08 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.


நேற்று அதிகாலை 1.30 மணியளவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதால், றம்புக்கணை - மாவனெல்லை, றம்புக்கணை - கேகாலை மற்றும் றம்புக்கணை- குருநாகல் பிரதான வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டது.


இதன் காரணமாக 08 புகையிரத பயணங்கள் தடைப்ப்ட்டிருந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments:
Write comments