பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்


 

ரம்புக்கனை பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று காலை 5 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ரம்புக்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரிகள் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.


சம்பவம் தொடர்பில் கேகாலை நீதவான் நேற்று இரவு வரை விசாரணைகளை மேற்கொண்டார்.


சம்பவம் குறித்து விசாரணை நடத்த 20 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:
Write comments