நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை


 

தெற்கு கடற்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருந்தொகை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


இதன்போது 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோகிராம் ஐஸ் போதைபொதை தொகை ஆகியவற்றை படையினர் கைப்பற்றியுள்ளனர்..


இந்நாட்டு பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, ​​6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், கடற்படை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:
Write comments