ஜெயலலிதா மரணம் - மீண்டும் விசாரணை!


 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஏப்ரல் 5 ஆம் திகதி அப்பல்லோ மருத்துவர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.


விசாரணை ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் எழிலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது. அதில், அப்பல்லோ மருத்துவர்களிடம் ஏப்ரல் 5 முதல் 7 ஆம் திகதி வரை மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தக் கூட்டத்துக்குப் பிறகு சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூரபாண்டியன் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வத்திடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஏற்கெனவே ஆஜரான அப்பல்லோ மருத்துவர்களிடம் சில விளக்கங்களைத் தெளிவுபடுத்த வேண்டி இருப்பதால் அவர்களிடம் ஏப்ரல் 5 முதல் 7 ஆம் திகதி வரை 3 நாள்கள் விசாரணை நடைபெற உள்ளது என்றார்.


செயலர் மாற்றம் : ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து ஆணையத்தின் புதிய செயலராக சஷ்டிசுபன் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments:
Write comments