'அசானி' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை!


 தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


நிகோபர் தீவுகளுக்கு 200 கிலோ மீட்டர் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியிலும், அந்தமான் தீவுகளுக்கு 100 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கிலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.


இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். அதற்கடுத்த 12 மணிநேரத்தில் புயலாகவும் மாறவாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு ´அசானி´ என்று பெயரிடப்பட்டுள்ளது.


இதனால், அந்தமான் கடல், அதையொட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


நடுக்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் விமானம், கப்பல்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக கரை திரும்ப அறிவுரை வழங்கப்பட்டது.


No comments:
Write comments